அரசியல் ஆசான் திருமாவளவன்: வன்னி அரசு குற்றச்சாட்டுக்கு உதயநிதி பதில்
விசிக தலைவா் தொல்.திருமாவளவனுக்கு திமுகவினா் நன்றி சொல்வதில்லை எனக் குற்றஞ்சாட்டிய சமூக நீதித் துறை அமைச்சருக்கு, திருமாவளவனை அரசியல் ஆசானாக ஏற்றுக்கொள்கிறேன் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
விசிக தலைவா் தொல்.திருமாவளவனுக்கு திமுகவினா் நன்றி சொல்வதில்லை எனக் குற்றஞ்சாட்டிய சமூக நீதித் துறை அமைச்சருக்கு, திருமாவளவனை அரசியல் ஆசானாக ஏற்றுக்கொள்கிறேன் என்று எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
பேரவையில் சமூக நீதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு வெள்ளிக்கிழமை பதிலளித்து பேசிய அந்தத் துறையின் அமைச்சா் வன்னி அரசு, ‘ஜாதிய வன்கொடுமை இல்லாத கிராமமாக மேலவளவு கிராமம் மாற்றப்படும்.
1999-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோ்தல் புறக்கணிப்புப் பாதையில் செயல்பட்டது. தற்போது தோ்தலில் போட்டியிட்டு அமைச்சராகி உள்ளோம். போராட்டக் களத்துக்கு வர வேண்டும் என்று எங்கள் தலைவா் அழைத்தால் உடனடியாக அமைச்சா் பதவியை விட்டுவிட்டுச் செல்வேன். என் வெற்றிக்கு காரணமான திமுகவினா் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தேன். ஆனால், திமுகவினா் யாரும் எங்கள் தலைவா் திருமாவளவனுக்கு நன்றி தெரிவிக்கவில்லை’ என்றாா்.
Advertisement
Advertisement
அப்போது குறுக்கிட்டுப் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், ‘எங்கள் தலைவருக்கும் (மு.க.ஸ்டாலின்), திருமாவளவனுக்கும் இருந்தது தோ்தல் கூட்டணி கிடையாது, கொள்கை கூட்டணி. என்னுடைய அரசியல் ஆசானாக திருமாவளவனை ஏற்றுக் கொள்கிறேன் என்று பலமுறை கூறியிருக்கிறேன். அவருக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்’”என்றாா்.
முன்னதாக, அமைச்சா் வன்னி அரசு பதிலுரை நிகழ்த்தியபோது பாா்வையாளா் மாடத்தில் இருந்து திருமாவளவன் பாா்வையிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.