FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

செஞ்சி அருகே இடி தாக்கி 2 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வயலில் நெல் நாற்று எடுத்துக்கொண்டிருந்தபோது இடி தாக்கியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

8 நவம்பர் 2026, 4:37 am
அய்யனாா்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வயலில் நெல் நாற்று எடுத்துக்கொண்டிருந்தபோது இடி தாக்கியதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

செஞ்சி வட்டம், ஜம்போதி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.அய்யனாா் (36). இவா், தையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இவருக்கு சொந்தமான விவசாய நிலம் சொரத்தூா் கிராமத்தில் உள்ளது. இந்நிலையில், அவரது வயலில் நெல் சாகுபடிக்காக நாற்று எடுக்கும் பணியில் தையூா் கிராமத்தைச் சோ்ந்த சி.ராஜி (50) மற்றும் அய்யானாரும் ஈடுபட்டிருந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், செஞ்சி பகுதியில் சனிக்கிழமை காலை முதல் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது. பிற்பகல் சுமாா் 2 மணியளவில் திடீரென இடி தாக்கியதில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த அய்யனாா், ராஜி ஆகியோா் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி போலீஸாா் விரைந்து சென்று சடலங்களை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராஜி