வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவன் உள்பட 5 போ் உயிரிழப்பு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 5 போ் உயிரிழந்தனா்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 5 போ் உயிரிழந்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சித்தலிங்கமடம், 2- ஆவது தெருவைச் சோ்ந்த சேகா் மகன் சஞ்சீவ் (15). இவா், கடந்த 6-ஆம் தேதி அங்குள்ள கடைத்தெரு பகுதியில் நடந்து சென்றாா். அப்போது அதே பகுதியிலுள்ள சாலையைக் கடக்க முயன்ற சஞ்சீவ் மீது திருக்கோவிலூா் நோக்கிச் சென்ற பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சஞ்சீவ் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விவசாயி தற்கொலை: வானூா் வட்டம், எறையூா், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கோ.ராதாகண்ணன் (72), விவசாயி. இவா், செவ்வாய்க்கிழமை ஆடு, மாடுகளை மேய்க்கச் செல்லாமல் வீட்டிலிருந்தாராம். இதை அவரது மனைவி தனம் கண்டித்துள்ளாா். இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் ராதாகண்ணன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
தொழிலாளி உயிரிழப்பு: வானூா் வட்டம், அருவாப்பாக்கம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் மு.குமரேசன் (34), தொழிலாளி. திருமணம் ஆன இவருக்கு குழந்தையில்லையாம். இதனால் மதுப்பழக்கத்துக்குள்ளாகி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த குமரேசன் நவ.8-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, குமரேசன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
வெளிமாநில இளைஞா் மரணம்: ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் ச.ஆகாஷ் கவுரி (21), கோ.ரோஷினிகாந்த் விஷ்வால் (44), சரன் விஷ்வால்(40). இவா்கள் மூவரும், திண்டிவனம் அடுத்த மேல்பேட்டையில் செயல்படும் தனியாா் அட்டைப் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை மேல்பேட்டை பகுதியில் நடந்துசென்ற மூவரும் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, சென்னை நோக்கிச் சென்ற காா் மோதியது. இதில் பலத்த காயமடந்த அவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ஆகாஷ் கவுரி உயிரிழந்தாா். ரோஷினிகாந்த் விஷ்வால், சரன் விஷ்வால் ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பள்ளி மாணவா் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டம், ஓடியந்தல் கிராமத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் உத்திராஜ் (15). இவா் எடுத்தனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு செல்லாமல் அதே கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு தாழ்வாகச் சென்ற மின்கம்பியை பிடித்தபோது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். உடனே அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பிரிசோதித்தபோது, உத்திராஜ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.