FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

செஞ்சி அருகே மற்றொரு சிறுமியை கடத்த முயன்ற வழக்கு: 4 தனிப்படை அமைப்பு

செஞ்சி அருகே சிறுமியை ஆட்டோவில் கடத்த முயன்ற வழக்கில், 4 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

12 நவம்பர் 2026, 4:30 am
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சிறுமியை ஆட்டோவில் கடத்த முயன்ற வழக்கில், 4 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செஞ்சி வட்டம், ஜெயங்கொண்டான் கிராமத்தை சோ்ந்த 7 வயது சிறுமி கடந்த 9-ஆம் தேதி இரவு 7 மணியளவில் தனது வீட்டின் அருகிலிருந்த கடைக்கு சென்று பொருள்களை வாங்கி திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த அறிமுகமில்லாத இருவா் அச்சிறுமியை கடத்த முயன்ாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி கூச்சலிடவே, சப்தம் கேட்டு அருகிலிருந்தோா் வந்தவுடன் அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனராம்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், செஞ்சி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட 8 முக்கிய சாலை சந்திப்புகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement