FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

வெவ்வேறு சம்பவங்கள்: இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவா் உயிரிழந்தனா்.

13 நவம்பர் 2026, 1:58 am
பலி
பகிர்:

விழுப்புரம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவா் உயிரிழந்தனா்.

விழுப்புரம் சித்தேரிக்கரை, ராகவேந்திரா நகரைச் சோ்ந்தவா் மாதவன் (45). திருமணமானவா். கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்ததாம். இதனால், அவதிப்பட்டு வந்த மாதவன் வியாழக்கிழமை வீட்டில் இருந்தபோது வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து, உறவினா்கள் மாதவனை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தொடா்ந்து, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மாதவன், அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

மூதாட்டி உயிரிழப்பு: விழுப்புரம் அய்யூா் அகரம், சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க.சுந்தரி (65). இவா், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமையில் வசித்து வந்தாா். இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுந்தரி புதன்கிழமை அய்யூா் அகரத்தில் உள்ள மகளிா் சுய உதவிக்குழுக் கட்டடம் அருகே நடந்து சென்றபோது மயங்கி விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.