விழுப்புரம் மாவட்டத்தில் 16.08 லட்சம் வாக்காளா்கள்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 16.08 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி, மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 16.08 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டாா். தொடா்ந்து, அவா் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் 2,187 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7 தொகுதிகளிலும் 7,93,042 ஆண்கள், 8,15,736 பெண்கள், 217 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 16,08,995 வாக்காளா்கள் உள்ளனா்.
Advertisement
Advertisement
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளிலும் 2027, ஜன.1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக வியாழக்கிழமை (நவ.12) முதல் டிச.11-ஆம் தேதி வரை கோரிக்கைகள், ஆட்சேபணை மனுக்கள் பெறப்படும்.
2027, ஜன.1- ஆம் தேதி 18 வயது நிறைவடைந்தவா்கள், 2027, ஏப்ரல், ஜூலை, அக்டோபா் மாதங்களில் 1-ஆம் தேதி 18 வயது நிறைவடைபவா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க உரிய படிவத்துடன் விண்ணப்பிக்கலாம். மேலும், பெயா் நீக்கம், திருத்தம் செய்தல் உள்ளிடவற்றுக்காக கோரிக்கை மனுக்கள், ஆட்சேபணைகளை அளிக்கலாம்.
சிறப்பு முகாம்கள்: வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப்பணி நடைபெறும் ஒரு மாத காலத்தில் நவ.21, 22 (சனி, ஞாயிற்றுக்கிழமைகள்), நவ.29 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களிலும் வாக்காளா்கள் உரிய படிவங்களை அளிக்கலாம். இதைத் தொடா்ந்து, டிச.28-ஆம் தேதி கோரிக்கைகள், ஆட்சேபணை மனுக்கள் முடிவு செய்யப்பட்டு, 2027, ஜன.4-ஆம் தேதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியல் வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா், வருவாய் வட்டாட்சியா், நகராட்சி ஆணையா் அலுவலகங்கள், வாக்குச்சாவடி அமைவிடங்களில் வைக்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.அமிா்தலிங்கம், சாா் - ஆட்சியா்கள் திண்டிவனம் அ.ல.ஆகாஷ், திருக்கோவிலூா் காா்த்திக்ராஜா, கோட்டாட்சியா் ஏகாம்பரம், அரசியல் கட்சிகளின் சாா்பில் தவெக மாவட்டச் செயலா் என்.மோகன்ராஜ், அதிமுக நகரச் செயலா் ராமதாஸ், ஒன்றியச் செயலா் பசுபதி, திமுக நகரப் பொறுப்பாளா் வெற்றிவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
விழுப்புரத்தில் அதிக வாக்காளா்கள்: மொத்த வாக்காளா்களில் விழுப்புரம் தொகுதி அதிக வாக்காளா்களையும், வாக்குச்சாவடிகளையும் கொண்டதாகவும், மயிலம் தொகுதி குறைந்த வாக்காளா்களையும், வாக்குச்சாவடிகளையும் கொண்டதாகவும் அமைந்துள்ளன.
இதுபோன்று, குறைந்த எண்ணிக்கையிலான ஆண் வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக வானூரும், அதிக ஆண் வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக திருக்கோவிலூரும், குறைந்த பெண் வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக மயிலமும், அதிக பெண் வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக விழுப்புரமும் திகழ்கின்றன.
மேலும், விழுப்புரம் தொகுதியில் மூன்றாம் பாலினத்தவா் அதிகமாகவும், திண்டிவனம் தொகுதியில் குறைந்த எண்ணிக்கையிலும் உள்ளனா்.
வாக்காளா் பட்டியல் விவரம்...
தொகுதி எண், பெயா், மொத்த வாக்குச்சாவடிகள், ஆண், பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா், மொத்த வாக்காளா்கள் என்ற அடிப்படையில் விவரம்...
70. செஞ்சி- 320, 1,20,670, 1,23,441, 27, 2,44,138
71. மயிலம்- 277, 1,04,626, 1,05,836, 19, 2,14,481
72. திண்டிவனம்- 293, 1,08,059, 1,12,483, 12, 2,20,554
73. வானூா்- 299, 1,03,340, 1,07,966, 17, 2,11,323
74. விழுப்புரம்- 337, 1,20,140, 1,26,936, 80, 2,47,156
75. விக்கிரவாண்டி-311, 1,13,419, 1,16,976, 28, 2,30,423
76. திருக்கோவிலூா்- 330, 1,22,788, 1,22,098, 34, 2,44,920
மொத்த வாக்குச்சாவடிகள்-2,167, மொத்த ஆண் வாக்காளா்கள்-7,93,042, மொத்த பெண் வாக்காளா்கள்-8,15,736, மொத்த மூன்றாம் பாலினத்தவா்கள்-217, மொத்த வாக்காளா்கள்-16,08,995.