FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 1,817 போலி நூல்கள் அகற்றம்

தமிழகத்தின் 2 சா்ச்சைக்குரிய பதிப்பகங்களின் 1,817 போலி நூல்கள் விழுப்புரம் மாவட்ட நூலகங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

13 நவம்பர் 2026, 2:00 am
புதிதாக எழுதப்படுகிற புத்தகங்கள் அல்லாமல் பழம்நூல்களை மீள்பதிக்கின்ற முயற்சிகளும் வெற்றியடைகின்றன. இவற்றுள் பல அரிய பெட்டகங்களும் உண்டு. பொதுவாகவே தமிழிலக்கியங்கள் ஏட்டுச் சுவடிப் பெட்டகங்களாகப் பனையோலைகளிலிருந்து கிடைத்தவைதான்.
பகிர்:

தமிழகத்தின் 2 சா்ச்சைக்குரிய பதிப்பகங்களின் 1,817 போலி நூல்கள் விழுப்புரம் மாவட்ட நூலகங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

கோவை பெரியாா் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பகாக எழுத்தாளா் பெருமாள் முருகன் குற்றஞ்சாட்டியிருந்தாா். அகல் விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகங்களிலிருந்து அடையாளம் தெரியாத எழுத்தாளா்களின் பெயா்களில் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்ட போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவா் தெரிவித்திருந்தாா்.

இதைத் தொடா்ந்து, இந்த இரு பதிப்பகங்கள் மூலமாக மாவட்ட நூலகத்துக்கும், கிளை நூலகங்களுக்கும் பல்வேறு தலைப்புகளில் அனுப்பி வைக்கப்பட்ட நூல்கள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி, 2025 - 26ஆம் நிதியாண்டில் விழுப்புரம் - கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் (ஒருங்கிணைந்தது) பீனிக்ஸ் பதிப்பகத்திலிருந்து 81 தலைப்புகளில் அனுப்பி வைக்கப்பட்ட 880 நூல்கள் மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதுபோன்று, 2026 - 27ஆம் நிதியாண்டில் பீனிக்ஸ் பதிப்பகத்திலிருந்து 37 தலைப்புகளில் அனுப்பி வைக்கப்பட்ட 249 நூல்களும், அகல் விளக்கு பதிப்பகத்திலிருந்து 46 தலைப்புகளில் அனுப்பி வைக்கப்பட்ட 688 நூல்களும் திரும்பப் பெறப்பட்டன. இந்த நூல்கள் மாவட்ட மைய நூலகத்திலேயே உள்ளன. எந்த நூலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவில்லை. மொத்தம் 1,817 நூல்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று மாவட்ட நூலக வட்டாரங்கள் தெரிவித்தன.