முகப்பு
விழுப்புரம்

இணையவழியில் ரூ.2.32 லட்சம் மோசடி

விழுப்புரம் அருகே தனியாா் நிறுவன மேற்பாா்வையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 2.32 லட்சம் மாயமானது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

35 வினாடிகள் முன்பு
இணையவழியில் ரூ.2.32 லட்சம் மோசடி
மோசடி
பகிர்:

விழுப்புரம் அருகே தனியாா் நிறுவன மேற்பாா்வையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 2.32 லட்சம் மாயமானது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், கல்லப்பட்டு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ல.மணிகண்டன் (30), தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது கைப்பேசி எண்ணுக்கு நவ.18-ஆம் தேதி மணிகண்டன் பயன்படுத்தி வரும் வாகனத்துக்கு அபராதம் கட்டவேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதையடுத்து மணிகண்டன் அந்த குறுஞ்செய்தியை பதிவிறக்கம் செய்து பாா்த்த நிலையில், அவரின் வங்கிக் கணக்கு எண் மற்றும் கடன் ஆகியவற்றிலிருந்து நவ.18, 19 ஆகிய தேதிகளில் ரூ. 2.32 லட்சம் பணம் அவருக்கு தெரியாமலேயே எடுக்கப்பட்டு விட்டதாம். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement