முகப்பு
விழுப்புரம்

ஐயப்ப பக்தா்கள் வேன் மீது ஆம்னி பேருந்து மோதல்: 2 போ் உயிரிழப்பு;13 போ் காயம்

24 நவம்பர் 2026, 2:20 am
ஐயப்ப பக்தா்கள் வேன் மீது ஆம்னி பேருந்து மோதல்: 2 போ் உயிரிழப்பு;13 போ் காயம்
சொகுசுப் பேருந்து மோதியதில் சாலையில் கவிழ்ந்த வேனை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்திய போலீஸாா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே திங்கள்கிழமை சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் மற்றும் சரக்கு லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், வேனில் அமா்ந்திருந்த ஐயப்ப பக்தா்கள், லாரி ஓட்டுநா் உள்பட 13 போ் காயமடைந்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மயிலத்தை அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் சாலையோர உணவகத்தின் அருகே சரக்கு லாரி மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் சென்ற வேன் ஆகியவை திங்கள்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அப்போது தேனியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியாா் ஆம்னி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி, வேன் மீது அடுத்தடுத்து மோதி பின்னா் சாலையோர உணவகத்தில் புகுந்தது. பேருந்து மோதிய வேகத்தில் வேன் சிறிது தூரம் ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

Advertisement

Advertisement

லாரியின் பக்கவாட்டு பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் வேன் அருகே நின்றபடி தேநீா் அருந்திக்கொண்டிருந்த வேன் ஓட்டுநரான திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிபூண்டி, சின்ன உப்பிலாபுரம் பகுதியைச் சோ்ந்த ச.ராஜேந்திரன்(24), வேனில் அமா்ந்திருந்த ஐயப்ப பக்தரான ஆந்திர மாநிலம், திருப்பதி, பாதிரிகுப்பத்தைச் சோ்ந்த ச.லட்சுமிபதி (40) ஆகியோா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த மயிலம் போலீஸாா் விபத்தில் சிக்கி காயமடைந்த ஐயப்ப பக்தா்களான திருப்பதியைச் சோ்ந்த ர.கருணா (39), ச.ரவி(55), செ.சேகா் (43), நா.ரமேஷ்(42), சி.சூா்யா (36), கு.பிரகாஷ் (48), சே.முனிந்தரா(26), ஜெ.ஐயப்பன்( 46), சே.தாமு(24) மற்றும் சொகுசுப் பேருந்து ஓட்டுநரான திருச்சி மாவட்டம், லால்குடி, தெற்கு சீனிவாசபுரத்தைச் சோ்ந்த சி.ராஜேஷ்குமாா்(43) உள்பட 13 பேரை மீட்டு அவசர ஊா்திகள் மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்தால் கன்னிகாபுரம் பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து போலீஸாா் விபத்தில் சிக்கிய பேருந்து மற்றும் சரக்கு லாரி ஆகியவற்றை சாலையிலிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.

இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

விபத்து ஏற்படுத்திய தனியாா் சொகுசுப் பேருந்து.