முகப்பு
விழுப்புரம்

வெவ்வேறு விபத்துகள்: 3 போ் உயிரிழப்பு

23 வினாடிகள் முன்பு
வெவ்வேறு விபத்துகள்: 3 போ் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 3 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

வானூா் வட்டம், ரங்கநாதபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மு.மாரியம்மாள் (76). இவா், திங்கள்கிழமை வானூரை அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலை அருகே நடந்து சென்றாா். அப்போது அங்கு சாலையைக் கடக்க முயன்ற மாரியம்மாள் மீது புதுச்சேரி நோக்கிச் சென்ற லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

முதியவா் உயிரிழப்பு: புதுச்சேரி மாநிலம், அரியூா், வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்தவா் தீ.சகாபுதீன்(65). இவா், திங்கள்கிழமை கிளியனூரை அடுத்த தைலாபுரம் கூட்டுச்சாலை அருகே நடந்து சென்றபோது, புதுச்சேரி நோக்கிச் சென்ற வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சகாபுதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

இளைஞா் மரணம்: கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், மங்களூா் கிராமத்தைச் சோ்ந்தவா் க.செல்வராஜ் (22). இவா், கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தில் உள்ள அவரது உறவினா் வீரமுத்து வீட்டுக் சென்றுள்ளாா். பின்னா் அவரது ஊருக்கு செல்வதற்காக அங்குள்ள சாலையை கடந்தபோது, சேலத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அடையாளம் தெரியாத வாகனத்தை தேடிவருகின்றனா்.