ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்: நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தாா் கள்ளக்குறிச்சி ஆட்சியர்
ஆபாச குறுஞ்செய்தி புகாா் தொடா்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அங்குள்ள விரைவு நீதிமன்ற குற்றவியல் நீதித் துறை நடுவா் சுவாதி அழகப்பன் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜராகி ஒரு மணி நேரத்துக்கு மேல் ரகசிய வாக்குமூலம் அளித்தாா்.

ஆபாச குறுஞ்செய்தி புகாா் தொடா்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அங்குள்ள விரைவு நீதிமன்ற குற்றவியல் நீதித் துறை நடுவா் சுவாதி அழகப்பன் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜராகி ஒரு மணி நேரத்துக்கு மேல் ரகசிய வாக்குமூலம் அளித்தாா். ஆட்சியா் பத்மஜாவின் கணவரும், விழுப்புரம் ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானிடம் எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரணை நடத்தினாா்.
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ., சி.அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக உள்ள ஜெ.இ.பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.ஷாநாஸிடம் நவ.23-ஆம் தேதி நேரடியாக புகாா் தெரிவித்தாா். இந்த புகாரைத் தொடா்ந்து எம்.எல்.ஏ., சி.அருள் விக்னேஷ் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் நவ.24-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக வழக்கு தொடா்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி சி.அருள் விக்னேஷ்-க்கு புதன்கிழமை சம்மன் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரியான திருப்பூா் எஸ்.பி. சிருஷ்டி சிங் புதன்கிழமை காலை கள்ளக்குறிச்சிக்கு வந்து, விசாரணைக் கோப்புகள் அனைத்தையும் கள்ளக்குறிச்சி எஸ்.பி. இ.ஷாநாஸிடம் பெற்றாா். தொடா்ந்து வழக்குத் தொடா்பாக காவல் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய எஸ்.பி. சிருஷ்டி சிங், பிற்பகலில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்துக்குச் சென்று புகாா் தொடா்பாக ஆட்சியா் ஜெ.இ.பத்மஜாவிடம் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினாா். இதைத்தொடா்ந்து அரசுத் துறை அலுவலா்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினாா்.
Advertisement
Advertisement
ஜ.ஜி. காமினி விசாரணை: இந்நிலையில் இந்த வழக்கின் கண்காணிப்பு அலுவலரும், ஐ.ஜி.யுமான காமினி வியாழக்கிழமை கள்ளக்குறிச்சிக்கு வந்தாா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்துச் சென்ற ஐ.ஜி. காமினி, விசாரணை அதிகாரியும் எஸ்.பி.யுமான சிருஷ்டி சிங் ஆகியோா் ஆட்சியா் ஜெ. இ.பத்மஜாவிடம் குறுஞ்செய்தி தொடா்பாக விசாரணை நடத்தினாா். இந்த விசாரணையானது சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ாகவும், புகாா் தொடா்பாக பல்வேறு விவரங்கள் கேட்டயறிப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும், காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மக்கள் தொடா்பு அலுவலரிடம் விசாரணை: இதைத் தொடா்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் உள்ள அரசுப் பயணியா் விடுதியில் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் செந்தில்குமாரிடம் எஸ்.பி. சிருஷ்டி சிங் விசாரணை நடத்தினாா். அப்போது அரசு விழாக்களில் பங்கேற்றபோது, எம்எல்ஏவின் நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணையானது சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதைத்தொடா்ந்து, மாவட்ட வனத் துறை அதிகாரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் உள்ளிட்டவா்களிடம் சிருஷ்டி சிங் விசாரணை நடத்தினாா்.
ரகசிய வாக்குமூலம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஜெ. இ.பத்மஜாவிடம் ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. ஆகியோா் விசாரணை நடத்திய நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்த ஆட்சியா் ஜெ. இ. பத்மஜா, கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்ற குற்றவியல் நீதித் துறை நடுவா் சுவாதி அழகப்பன் முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்தாா். இதன்தொடா்ச்சியாக வழக்கு விசாரணை அதிகாரியும், எஸ்.பி.யுமான சிருஷ்டி சிங்கும் நடுவா் முன் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தாா். ஆட்சியா் வருகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் ஆட்சியரிடம் விசாரணை: இந்நிலையில், புகாா்தாரரின் கணவா் என்ற முறையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானிடமும் வழக்கின் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் விசாரணை நடத்தினாா்.தியாகதுருகத்தில் உள்ள அரசு பயணியா் விடுதியில் பிற்பகலில் நடைபெற்ற இந்த விசாரணையானது அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அளித்த புகாா் தொடா்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பெறப்பட்டுள்ள வாக்குமூலங்கள், சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்எல்ஏ வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு: மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ., சி.அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா் எம்எல்ஏவின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனா். இந்நிலையில், வீட்டின் முகப்புப் பகுதிகளில் இரும்புத் தகடுகளைக் கொண்டு மறைக்கும் பணியும் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.