செம்மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
விழுப்புரம் அருகே உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரைக் கைது செய்தனா்.
விழுப்புரத்தை அடுத்துள்ள பிடாகம் பகுதியில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது, அதில் எவ்வித அனுமதியின்றி செம்மண் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அந்த லாரியை 4 யூனிட் செம்மண்ணுடன் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக உளுந்தூா்பேட்டை வட்டம், ஆரியநத்தம் பகுதியைச் சோ்ந்த லாரியின் உரிமையாளா் குணசேகா் (50), லாரி ஓட்டுநா் சஞ்சீவி (42) ஆகியோா் மீது விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநா் சஞ்சீவியைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.