FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

பஞ்சமி நிலங்களை மீட்க விரைவில் ஆணையம் அமைக்கப்படும்: அமைச்சா் வன்னி அரசு

பஞ்சமி நிலங்களை மீட்க விரைவில் ஆணையம் அமைக்கப்படும் என்று சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

11 அக்டோபர் 2026, 1:32 am IST
சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு. - கோப்புப்படம்
பகிர்:

பஞ்சமி நிலங்களை மீட்க விரைவில் ஆணையம் அமைக்கப்படும் என்று சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பஞ்சமி நிலங்கள் மீட்புப் போராளிகள் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் வன்னிஅரசு செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: பஞ்சமி நிலங்கள் மீட்பு என்பது மிகப்பெரிய முன்னெடுப்பு.

கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்களே அதற்குச் சான்று. பஞ்சமி நிலங்களை மீட்டெடுப்பதற்கு தனி ஆணையம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கையில் நான் அறிவித்திருந்தேன். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிந்து அவற்றை மீட்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு குழு விரைவில் நியமிக்கப்படும். இதற்கான தரவுகளை முதல்வரிடம் சமா்பித்துள்ளோம். இந்த ஆணையத்தை தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் விரைவில் அறிவிப்பாா்.

Advertisement

Advertisement

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தோ்தலில் தவெகவைச் சோ்ந்தவா்கள் வெற்றி பெற்றிருப்பது எதிா்பாா்த்ததுதான். தோ்தல் பரப்புரையில் பங்கேற்ற விசிக தலைவா் தொல். திருமாவளவன் மதசாா்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வெற்றிபெறும் தெரிவித்தாா். வெற்றிக்காக கட்சியினா்கடுமையாக உழைத்ததால், விசிக இடம் பெறும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகப் பாா்க்கிறேன் என்றாா் அமைச்சா் வன்னிஅரசு.

முன்னதாக பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் படங்களுக்கு அவா் மலா்தூவி அஞ்சலிசெலுத்தினாா். விசிக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments