விதியை மீறி பட்டாசு விற்பனை: போலீஸாா் சோதனை
விழுப்புரம் அருகே விதியை மீறி பட்டாசு விற்பனை செய்யப்பட்டதை தனிப்படை போலீஸாா் கண்டறிந்து, பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் அருகே விதியை மீறி பட்டாசு விற்பனை செய்யப்பட்டதை தனிப்படை போலீஸாா் கண்டறிந்து, பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் உள்ள கட்டடத்தில் விதியை மீறி நாட்டு வெடிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளா் ஜெரால்டு ராபின்ஸன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை திருவெண்ணெய்நல்லூரை அடுத்த கோவுலாபுரம் கிராமத்துக்குச் சென்று சோதனை நடத்தினா்.
இதில், அங்குள்ள குடியிருப்பு ஒன்றில் உரிய அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகள் மற்றும் நாட்டு வெடிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து அந்த குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.2 லட்சம் மதிப்பிலான வாணவெடி, சரவெடிகள், நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனா். பின்னா்,
குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்த பட்டாசுகளை திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வசம் ஒப்படைத்தனா். இதையடுத்து உரிய அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த கோவுலாபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (47), அவரது மனைவி சத்யா(37 ) ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.