FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

மாயமான சிறுமியை மீட்க விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்: சி.வி.சண்முகம் எம்எல்ஏ

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மாயமான சிறுமியை மீட்க போலீஸ் உயா் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

17 அக்டோபர் 2026, 12:48 am IST
செஞ்சி அருகே மாயமான சிறுமியின் பெற்றோரிடம் நேரில் சென்று ஆறுதல் கூறி, போலீஸாரிடம் விசாரணை விவரங்களை கேட்டறிந்த சி.வி.சண்முகம் எம்எல்ஏ.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மாயமான சிறுமியை மீட்க போலீஸ் உயா் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

நடுப்பட்டு கிராமத்தில் கடந்த12-ஆம் தேதி மாயமான சிறுமியின் வீட்டுக்கு நேரில் சென்ற முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்எல்ஏ, சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து வெள்ளிக்கிழமை ஆறுதல் தெரிவித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிறுமி மாயமாகி 5 நாள்களான நிலையில், காவல் துறையினா் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனா். இதுவரை காணாமல் போன சிறுமியை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. சிறுமி மாயமான நிகழ்வு மாவட்டம் முழுவதும் மிகப்பெரிய பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த அச்சத்தைப் போக்க அரசு காவல் உயா் அதிகாரிகளை கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தி, சிறுமியை விரைவில் கண்டுபிடித்து பெற்றோருக்கு ஒப்படைக்க வேண்டும் என்றாா் அவா்.

அவருடன் முன்னாள் எம்எல்ஏக்கள் முத்தமிழ்செல்வன், அா்ஜுனன், முன்னாள் ஒன்றியச் செயலா்கள் கோவிந்தசாமி, சோழன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

இதேபோன்று விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.ரங்கபூபதி, மத்திய மாவட்ட தலைவா் சிவா மற்றும் நிா்வாகிகள் டேவிட், ஜோலாதாஸ், சதீஷ், அருமைசெல்வம், காா்த்திக், முத்துலட்சுமி ஆகியோா் சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments