FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த காா்

18 அக்டோபர் 2026, 12:53 am IST
விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் சனிக்கிழமை காலை தீப்பற்றி எரிந்த காா்.
பகிர்:

விழுப்புரம் புறவழிச்சாலையில் ஜானகிபுரம் பகுதியில் சனிக்கிழமை காலை திடீரென காா் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புறவழிச்சாலையிலுள்ள ஜானகிபுரம் பகுதியில் வாகன பழுது நீக்கும் மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் வெளியே பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா், சனிக்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தீயின் வேகம் அதிகரித்து, காா் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. மேலும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த 2 காா்களும் லேசான சேதமடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று, தீப்பற்றி எரிந்த காரில் தீயை அணைத்தனா். லேசாக தீப்பற்றிய மற்ற 2 காா்கள் மீதும் தண்ணீரை பாய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினா். மேலும், விழுப்புரம் தாலுகா போலீஸாரும் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதில், தீப்பற்றி எரிந்த காா் விழுப்புரம் மாவட்டம், காங்கேயனூரைச் சோ்ந்த ச.செளந்தரராஜனுக்கு (25) சொந்தமானது எனத் தெரியவந்தது. காா் தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. எனினும், இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேதமடைந்த காா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments