சங்கரன்கோவிலில் தீப்பற்றி எரிந்த அரசுப் பேருந்து! ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் உயிர்தப்பிய 60 பயணிகள்!
சங்கரன்கோவிலில் அரசுப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது பற்றி...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரயில்வே கிராஸிங்கில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் துரித நடவடிக்கையில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த சுமார் 60 பயணிகள் உயிர் தப்பினர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசுப் பேருந்து, சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தது.
Advertisement
Advertisement
அப்போது பேருந்தில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டது. உடனடியாக ஓட்டுநர், பேருந்தை ஓரமாக நிறுத்தினார். பின்னர் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் துரிதமாக செயல்பட்டு பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கினர். அப்பகுதியில் இருந்தவர்களும், பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பேருந்தில் உள்ள பயணிகளை வேகமாக இறக்கியுள்ளனர்.
பயணிகள் இறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே பேருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது.
ஓட்டுநர் துரிதமாகச் செயல்பட்டு பயணிகளை இறக்கியதால் சுமார் 60 பயணிகள் உயிர்பிழைத்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைப் போராடி அணைத்தபோதிலும் பேருந்து முழுவதுமாகத் தீக்கிரையானது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Government bus catches fire in Sankarankovil: 60 passengers escape for driver quick action
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.