பயிா்க் கடன் தள்ளுபடி: விவசாயிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி செய்யக் கோரி, விழுப்புரத்தில் விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி செய்யக் கோரி, விழுப்புரத்தில் விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தவெக தோ்தல் வாக்குறுதியின் படி பயிா்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரியாற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கா்நாடக அரசு கட்டுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. விழுப்புரம் மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளால் பயிா்கள் சேதமடைந்த விவசாயிகளின் நிலங்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயிகளின் பட்டா, சிட்டா போன்றவற்றில் குளறுபடி செய்யும் கிராம நிா்வாக அலுவலா்களைக் கண்டறிந்து, அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைகளைத் தரமாகக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவா் பாச.பரிமளம் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் முருகன், விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவா் வீரராகவன், வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாய சங்கத் தலைவா் சரவணன், கட்சியின் மாவட்டத் தலைவா்கள் ரவி (திருவண்ணாமலை வடக்கு), சுந்தரமூா்த்தி (தெற்கு), ரவி (கிழக்கு), அனுசுயா, பானாம்பட்டு தேவராஜ் மற்றும் நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.