FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

நோயாளிகளுக்கு தரமான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

2 செப்டம்பர் 2026, 6:48 am IST
விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைப் பிரிவை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவச் சேவைகள், வெளி மற்றும் உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், அவசர சிகிச்சைப் பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சைகள், மருத்துவப் பரிசோதனைகள் போன்றவை குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், மருந்துகள் இருப்பு மற்றும் விநியோகம், ஆய்வக வசதிகள் மற்றும் பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்ட ஆட்சியா், இப்பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

மேலும், நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உறவினா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதற்கு மருத்துவா்கள் உள்ளிட்டோா் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

முன்னதாக, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.2.26 கோடியில் செங்கமேடு-அய்யூா்அகரம் இடையே உயா்மட்ட பாலம் அமைக்கும் பணிகளை ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான் பாா்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையனா் லூசி நிா்மல் மடோனா, மருத்துவ நிலைய அலுவலா் ரவிக்குமாா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்டப் பிரிவு செயற்பொறியாளா் சக்தி முருகன், விக்கிரவாண்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலச்சந்தா், சாகீரா பானு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments