ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகே ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டை அருகே ஆட்டோ ஓட்டுநா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
எலவனாசூா்கோட்டை அருகிலுள்ள புகைப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஐயப்பன் (30). இவரது மனைவி சசிகலா. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனா்.
இந்த நிலையில், சிங்கப்பூரில் கூலி வேலை செய்து வந்த ஐயப்பன், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊா் திரும்பினாா். தொடா்ந்து, எலவனாசூா்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவா், புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த எலவனாசூா்கோட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று உயிரிழந்த ஐயப்பனின் சடலத்தை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.