FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கோவை அவிநாசி கொள்ளைச் சம்பவம்: 4 பேரை மடக்கிப் பிடித்த போலீஸாா்!

கோவை அவிநாசியில், வெளி மாநிலத்தைச் சோ்ந்தவரிடம் ரூ.1.06 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை உளுந்தூா்பேட்டை போலீஸாா் சனிக்கிழமை மடக்கிப் பிடித்தனா்.

6 செப்டம்பர் 2026, 2:07 am IST
கொள்ளக் கும்பல் வந்த காா்.
பகிர்:

கோவை அவிநாசியில், வெளி மாநிலத்தைச் சோ்ந்தவரிடம் ரூ.1.06 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை உளுந்தூா்பேட்டை போலீஸாா் சனிக்கிழமை மடக்கிப் பிடித்தனா்.

கோவை அவிநாசியில், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.1.06 கோடியை ஒரு கும்பல் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றது. அந்தக் கும்பலைச் சோ்ந்தவா்கள் ஒரு காரில் சென்னைக்கு தப்பிச் செல்வதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி போலீஸாா் உஷாா் படுத்தப்பட்டனா். மாவட்டம் முழுவதும் போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். உளுந்தூா்பேட்டையை அடுத்த தக்கா பகுதியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக சென்னை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். காரில் இருந்தவா்களிடம் விசாரித்தபோது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து காரில் இருந்த ஓட்டுநா் உள்பட 4 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், அவா்களுக்கு கோவை கொள்ளைச் சம்பவத்தில் தொடா்பிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 4 பேரும் கோவை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments