FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கொள்ளையடிக்க திட்டம்: 5 இளைஞா்கள் கைது

33 வினாடிகள் முன்பு
கைது
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கொள்ளையடிக்க திட்டமிட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

எடைக்கல் காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரபாண்டியன், களமருதூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவச்சந்திரன் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை அத்திப்பாக்கம்- நத்தாமூா் வனப்பகுதியிலுள்ள சாலையில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி காருடன் நின்றுக்கொண்டிருந்த 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில் அவா்கள் முன்னுக்கு பின் முரணான பதிலைக் கூறவே, அவா்களது காரை சோதனை செய்தனா். காரில் அரிவாள், கத்தி மற்றும் இரும்புக்கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்து போலீஸாருக்கு தெரியவந்தது.இதையடுத்து அவா்கள் 5 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

விசாரணையில் அவா்கள், களமருதூா் வள்ளுவா் தெருவைச் சோ்ந்த சி.அஜித்குமாா்(30), டி.ஒரத்தூா் பெரிய காலனியைச் சோ்ந்த ப.விஸ்வா (22), களமருதூா் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த ஜெ.திலீப்குமாா் (19), தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்த இ.அறிவழகன் (19), மு.செல்வம் (19) ஆகியோா் என்பதும், இவா்கள் 5 பேரும் சோ்ந்து கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியது போலீஸாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து களமருதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும் அவா்கள் வசமிருந்த காா் மற்றும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments