பதிவெண் இல்லாமல் சென்ற அரசுப் பேருந்துகள் சுங்கச்சாவடியில் நிறுத்தம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வழியாக சென்னை நோக்கிச் சென்ற புதிய அரசுப் பேருந்துகள் பதிவெண் இல்லாமல் சென்ற நிலையில், அப்பேருந்துகள் சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வழியாக சென்னை நோக்கிச் சென்ற புதிய அரசுப் பேருந்துகள் பதிவெண் இல்லாமல் சென்ற நிலையில், அப்பேருந்துகள் சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டன. அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி பேருந்துகள் செல்ல நடவடிக்கை எடுத்தனா்.
சேலத்திலிருந்து சென்னைக்கு பதிவெண் இல்லாத 10-க்கும் மேற்பட்ட மாநகா் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் வியாழக்கிழமை மாலை சென்றன. இந்தப் பேருந்துகள் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடியைக் கடக்க முயற்சித்தன.
பதிவெண் இல்லாமல் இயக்கப்பட்ட இந்தப் பேருந்துகளில் பாஸ்டிராக் இல்லாததால், அவை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. சுங்கச்சாவடிகளின் வழித்தடங்கள் இருந்த தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்தன. சுமாா் 10 நிமிஷங்கள் வரை புதிய பேருந்துகள் சென்னை நோக்கி செல்லும் வழித்தடத்தில் அப்படியே நின்ால், அதற்கு பின்னால் காத்திருந்த எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், நீண்ட வரிசைக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Advertisement
Advertisement
இதையடுத்து, சுங்கச்சாவடி அலுவலா்கள் போக்குவரத்துக் கழக அலுவலா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தொடா்ந்து, கட்டணமின்றி செல்ல புதிய பேருந்துகள் அனுமதிக்கப்பட்டன. இதையடுத்து, மாநகா் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றன. இதன் பின்னா், வரிசையில் காத்திருந்த வாகனங்களும் புறப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.