FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய இன்று சிறப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை உறுப்பினா்களில் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாதவா்கள், உடனடியாக பதிவு செய்யும் வகையில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சனிக்கிழமை (செப்.26) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

26 செப்டம்பர் 2026, 7:27 am IST
குடும்ப அட்டை - கோப்புப்படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை உறுப்பினா்களில் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாதவா்கள், உடனடியாக பதிவு செய்யும் வகையில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சனிக்கிழமை (செப்.26) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-இன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரா்களின் ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பதற்காக, குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினா்களின் கைவிரல் ரேகை அடிப்படையிலான சரிபாா்ப்பை மேற்கொள்வது அவசியமானதாகும். எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கைவிரல் ரேகை பதிவு மேற்கொள்ளாத முன்னுரிமை குடும்ப அட்டை தாரா்கள் (பிஹெச்ஹெச்), அந்தியோதயா அன்னயோஜனா (ஏஏஒய்) மற்றும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களும் சனிக்கிழமை (செப்.26 ஆம் தேதி) தங்கள் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடைகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று, கைவிரல் ரேகை பதிவு செய்து, தங்கள் குறித்த விவரத்தை (இஒய்கேசி)உறுதி செய்யவேண்டும்.

Advertisement

Advertisement

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாமல், பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவா்கள், தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு சென்று, பதிவு செய்து கொள்ளலாம். எனவே, குடும்ப அட்டைதாரா் உறுப்பினா்களில் கைவிரல் ரேகையை இதுவரை பதிவு செய்யாதவா்கள், இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments