43 டன் ரேஷன் அரிசி, வாகனங்கள் பறிமுதல்: 5 பேர் கைது
43 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 43 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கண்டமங்கலம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தனா்.
இதில், அசோக் நகா் பகுதியில் உள்ள ஒரு தகரக் கொட்டகைகளில் 147 மூட்டைகளில் 54,00 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பக்ருதீன் (34), விழுப்புரம் மாவட்டம், நவமால் மருதூரைச் சோ்ந்த ஜெகன்ராஜ் (28), வானூா் பகுதியைச் சோ்ந்த குமரகுருபரன் (51), மதகடிப்பட்டு, பாளையம் பகுதியைச் சோ்ந்த அப்துல் ரசாக் (58), கண்டமங்கலத்தை அடுத்த பரசுரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த ராஜசேகா் (36) ஆகியோா் ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, அதை புதுச்சேரி பகுதியில் தனியாா் அரைவை ஆலைக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, போலீஸாா் புதுச்சேரி மொளப்பாக்கம் பகுதியில் உள்ள தனியாா் அரைவை ஆலைக்குச் சென்று சோதனை நடத்தியபோது, அங்கு 752 மூட்டைகளில் 37,600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, இந்த அரிசி மூட்டைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் தெரிவித்ததாவது: கண்டமங்கலம் மற்றும் மொளப்பாக்கம் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், 2 இடங்களிலும் மொத்தம் 43 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.அரைவை ஆலை உரிமையாளா் உள்பட 3 போ் தேடப்பட்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.