தொகுதி ஓர் அறிமுகம்: ஆற்காடு
ஆற்காடு தொகுதியின் முக்கிய தொழில் விவசாயம். சில பகுதிகளில் நெசவுத் தொழில் உள்ளது. ஆற்காடு வரலாற்று சிறப்பு மிக்க நகரம் ஆகும்.
தொகுதி பெயர்: ஆற்காடு
தொகுதி எண்: 42
சிறப்புகள்:
ஆற்காடு தொகுதியின் முக்கிய தொழில் விவசாயம். சில பகுதிகளில் நெசவுத் தொழில் உள்ளது. ஆற்காடு வரலாற்று சிறப்பு மிக்க நகரம் ஆகும். நவாப் ஆட்சிக்காலத்தில் ஆற்காடு தலைநகராக விளங்கியது. கிழக்கிந்திய கம்பெனி படைத்தளபதி ராபர்ட் கிளைவ் இந்தியாவில் முதன்முதலில் கைப்பற்றிய பகுதி இதுவே.
ஆற்காடு பிரியாணி, இனிப்புவகையான மக்கன்பேடா ஆகியவை புகழ் பெற்றவை. பாலாற்றின் குறுக்கே ஆற்காட்டை அடுத்த புதுப்பாடியில் மட்டுமே அணை கட்டபட்டுள்ளது. மேலும் ஆற்காடு நகரில் உள்ள தில்லி நுழைவாயில், ராஜா- ராணி குளம், பச்சைக்கல் மசூதி போன்றவை வரலாற்றுச் சிறப்பு மிக்கவை.
அடங்கியுள்ள பகுதிகள்:
ஆற்காடு நகராட்சியின் 30 வார்டுகள்
கலவை பேரூராட்சியின் 15 வார்டுகள்
திமிரி பேரூராட்சியின் 15 வார்டுகள்
விளாபாக்கம் பேரூராட்சியின் 15 வார்டுகள்
ஆற்காடு ஒன்றியம்- 25 ஊராட்சிகள்
திமிரி ஒன்றியம்- 55 ஊராட்சிகள்
கணியம்பாடி ஒன்றியம்- 18 ஊராட்சிகள்
வேலூர் ஒன்றியம்- ஒரு ஊராட்சி
ஆற்காடு ஒன்றியம்: அனத்தாங்கல், அரும்பாக்கம், அத்திதாங்கல்,தாஜ்புரா, எசையனூர், கரிகந்தாங்கல், கரிவேடு, கிளாம்பாடி, கீரம்பாடி, குக்குண்டி,லாடவரம்,மாங்காடு, மேச்சேரி, முப்புதுவெட்டி, முள்ளுவாடி, பாப்பேரி, புதேரி, புதுப்பாடி, புன்னப்பாடி, சக்கரமல்லூர், சர்வந்தாங்கல்,சாத்தூர், செம்பேடு, வளவனூர், கேவேளூர் ஆகிய 25 கிராமங்கள்.
திமிரி ஒன்றியம்: அகரம், அல்லாச்சேரி,அத்தியானம்,ஆரூர், ஆயிரம் மங்கலம், ஆனைமல்லூர், இருங்கூர், கனியனூர்,காவனூர், குப்பம்,குண்டலேரி,குப்பிடிசாத்தம், புங்கனூர், வெங்கடாபுரம், வரகூர்,பட்டணம், நம்பரை,துருகம், பரதராமி, தாமரைபாக்கம், வளையாத்தூர், வணக்கம்பாடி, விலாரி, பழையனூர், வெள்ளம்பி, வாழைபந்தல், பாரிமங்கலம், குட்டியம், பரிகல்பட்டு, மாம்பாக்கம், பின்னதாங்கல், கலவை புத்தூர், செங்கனாவரம், பாரிமங்கலம், மழையூர்,சிட்டந்தாங்கல், நல்லூர்,நாகலேரி, பாலி,மாந்தாங்கல், மோசூர், டி.புதூர் உள்ளிட்ட 55 கிராமங்கள்.
கணியம்பாடி ஒன்றியம்: சலமநத்தம்,கணிம்பாடி, சாத்துமதுரை, நஞ்சுகொண்டபுரம், அடுக்கம்பாறை, துத்திபட்டு, நெல்வாய், மோட்டுபாளையம், மூஞ்சூர்பட்டு, வல்லம், கம்மசமுத்திரம்,கனிகனியான், கீழ்பள்ளிபட்டு, பாலாத்துவண்ணன், கம்மவான்பேட்டை,மோத்தக்கல்,கத்தாழம்பட்டு, இடையன்சாத்து ஆகிய 18 கிராமங்கள்.
வேலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பாலமதி ஊராட்சி
வாக்காளர்கள்:
ஆண்கள்: 1,19,578
பெண்கள்:1,24,550
திருநங்கை: 1
மொத்த வாக்காளர்கள்: 2,44,129
வாக்குசாவடிகள்: 291
இதுவரை எம்எல்ஏக்கள்:
1952- எஸ்.பஞ்சாட்சரம் செட்டியார் (காங்கிரஸ்)
1957- எஸ்.காதர்செரீப் (காங்கிரஸ்)
1962- முனிரத்தினம் (திமுக)
1967- ஆற்காடு நா.வீராசாமி (திமுக)
1971- ஆற்காடு நா.வீராசாமி (திமுக)
1977- க.ஜெ.உய்யகொண்டான் (அதிமுக)
1980- ஏ.எம்.சேதுராமன் (அதிமுக)
1984- த.பழனி (அதிமுக)
1989- டி.ஆர்.கஜபதி (திமுக)
1991- ஜி.விசுவநாதன் (அதிமுக)
1996- பி.என்.சுப்பிரமணியன் (திமுக)
2001- ப.நீலகண்டன் (அதிமுக)
2006- கே.எல்.இளவழகன் (பாமக)
2011- வி.கே.ஆர்.சீனிவாசன் (அதிமுக)
தேர்தல் நடத்தும் அலுவலர்/ தொடர்பு எண்:
ஏ.செல்வராசு,
தனி துணை ஆட்சியர், மாவட்ட சமூகப் பாதுகாப்பு திட்டம்
9445461759