முகப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து வில் ஜாக்ஸ் விலகல்! இங்கிலாந்துக்கு சிக்கலா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸ் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து வில் ஜாக்ஸ் விலகல்! இங்கிலாந்துக்கு சிக்கலா?
காயம் காரணமாக பெவிலியன் திரும்பிய வில் ஜாக்ஸ் - படம் | AP
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸ் விலகியுள்ளார்.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று (நவம்பர் 22) மெல்போர்னில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸ் விலகியுள்ளார்.

நேற்றையப் போட்டியின்போது வில் ஜாக்ஸுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் டி20 தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக விரைவில் மாற்று வீரர் அறிவிக்கப்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆல்ரவுண்டரான வில் ஜாக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடினார். அவர் 3 போட்டிகளில் 138 ரன்கள் எடுத்தார். அதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். அவரது சிறப்பான பங்களிப்பு ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்ற உதவியது குறிப்பிடத்தக்கது.

summary

England all-rounder Will Jacks has withdrawn from the T20 series against Australia due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.