தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்ந்த்ததால் விலை குறைந்தது: பிரதமர் மோடி
எனது வேண்டுகோளுக்கு மக்கள் அளித்த வரவேற்பே, தங்கம் விலையைக் கட்டுப்படுத்த உதவியது என மோடி பேசியிருப்பது குறித்து...

லக்னௌ: தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கு மக்கள் அளித்த வரவேற்பே, அதன் விலையைக் கட்டுப்படுத்த உதவியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, மக்கள் தங்கத்தை வாங்குவதைக் குறைத்துக்கொண்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
லக்னௌவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, தனது வேண்டுகோளுக்குப் பிறகு மக்கள் தங்கத்தை வாங்குவதைக் குறைத்துக்கொண்டதாகவும், இது தங்கத்தின் விலையைக் குறைக்க உதவியதுடன், வாங்குபவர்கள் பணத்தைச் சேமிக்கவும் வழிவகுத்தது என்றும் கூறினார்.
Advertisement
Advertisement
கடந்த மே மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுகூட்டம் ஒன்றில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு நெருக்கடி சூழல், மேற்கு ஆசியாவில் நிலவிய மோதலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள சூழலில், தேச நலன் கருதி அவசியமில்லாமல் தங்க வாங்குவதைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
1965 இல் நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, மக்கள் ஒரு வேளை உணவைத் தவிர்க்குமாறு விடுத்த வேண்டுகோளை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதன் தேச நலன் கருதி அவசியமில்லாமல் தங்க வாங்குவதைத் தவிர்க்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கு மக்கள் செவிசாய்த்தனர். அதனால் தங்கத்தின் விலை குறைந்தது. ள் விடுத்திருந்தேன்.
அன்றைய மக்கள் அளித்த வரவேற்பையும், தற்போதைய சூழலில் மக்கள் காட்டிய இந்த ஒத்துழைப்பையும் ஒப்பிட்ட பிரதமர் மோடி, தேசத்தின் அந்த மனப்பான்மை இன்றும் மாறாமல் அப்படியே உள்ளது என்று குறிப்பிட்டவர், மோடி ஜி, நீங்கள் அன்று சொன்னீர்கள், நாங்கள் உங்களது வேண்டுகோளை கேட்டோம், அதனால் எங்கள் பணம் மிச்சமானது என்று மக்கள் கூறுகிறார்கள் என கூறினார்.
'சேம்பர் ஆஃப் டிரேடு அண்ட் இண்டஸ்ட்ரி' (சிடிஐ) அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தேவையில்லாமல் தங்க வாங்குவதைத் தவிர்க்குமாறு அவர் விடுத்த வேண்டுகோளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65,000 வரை குறைந்துள்ளதாகவும், இது வர்த்தகர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஏற்பட இருந்த இழப்புகளிலிருந்து காப்பாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாகத் தங்கத்தின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே 9-ஆம் தேதி 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,250 இருந்த நிலையில், சனிக்கிழமை அதன் விலை ரூ.12,523 ஆகக் குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், தங்க இறக்குமதி சுமார் 40 சதவீதம் சரிந்துள்ளது என்று கூறினார்.
மத்திய அரசின் தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் அதிகாரப்பூர்வ தங்க இறக்குமதி சுமார் 40% சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 41.25 பில்லியன் டாலராக இருந்து தங்கம் இறக்குமதி, தற்போது 24.78 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.