FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேர்தல் பிரச்சார கூட்டம் கோபத்தில் பேசாமல் வெளியேறினார் வைகோ

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நடைபெற்றது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நடைபெற்றது.

இதில் தொண்டர்கள் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்ததால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோபத்துடன் பேசாமல் வெளியேறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஆகியோர் உரையாற்றினர்

Advertisement

Advertisement

பின்னர் கடைசியாக வைகோ உரையாற்ற வந்தார். அப்போது உற்சாகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது தொண்டர்களை பட்டாசு வெடிப்பதை நிறுத்துமாறு வைகோ கேட்டுக்கொண்டார். ஆனால் அவரின் பேச்சை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பட்டாசு வெடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வைகோ கூட்டத்தில் பேசாமல் மேடையை விட்டு வெளியேறினார்.

இதனால் அவரின் பேச்சை கேட்பதற்காக கூடியிருந்து தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments