தேர்தல் ஒத்திவைப்பு: களத்தில் இறங்கி போராடப் போவதாக கருணாநிதி அறிவிப்பு
தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்து களத்தில் இறங்கி போராடுவேன் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னை: தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்து களத்தில் இறங்கி போராடுவேன் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
தமிழகம் முழுவதும் மே 16 ஆம் தேதி 232 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அதிக அளவிலான பண விநியோகம் காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு மே 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்தும், தேர்தலை முழுமையாக ரத்து செய்துவிட்டு புதிய அறிவிக்கை வெளியிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு விசாரணையின் போது, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் மூன்று வாரத்துக்கு தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 5 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படுகிறது என குற்றம்சாட்டிய அவர், தேவைப்பட்டால் களத்தில் இறங்கி போராடுவேன் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.