பி.,இ., படித்துள்ள என் மகளுக்கு வேலை எப்போது கிடைக்கும்? வெளிநாட்டில் வேலை பார்க்கும் யோகம் உண்டா? திருமணம் எப்போது நடைபெறும்? - ராமசாமி, திருநெல்வேலி
உங்கள் மகளுக்கு கடக லக்னம். தற்சமயம் பாக்கியாதிபதியான குருபகவானின் தசை நடக்கிறது. குருபகவான் ஆட்சி பெற்ற களத்திர ஸ்தானாதிபதி மற்றும் மாங்கல்யஸ்தானாதிபதியை பார்வை செய்கிறார்.
உங்கள் மகளுக்கு கடக லக்னம். தற்சமயம் பாக்கியாதிபதியான குருபகவானின் தசை நடக்கிறது. குருபகவான் ஆட்சி பெற்ற களத்திர ஸ்தானாதிபதி மற்றும் மாங்கல்யஸ்தானாதிபதியை பார்வை செய்கிறார். அதோடு அவருக்கு புதஆதித்ய யோகம் மற்றும் குருசந்திர யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. அவருக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் வங்கி, காப்பீடு போன்ற துறைகளில் தகுதிக்கேற்ற உத்தியோகம் அமையும். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதியான வரன் அமைந்து திருமணம் கைகூடும். வெளிநாடு சென்று வசிக்கும் யோகம் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.