FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருமணம் செய்வதற்கு முன் ஜாதகத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய தோஷ சாம்யம்!

திருமணத்தில் தோஷ சாம்யம் ஏன் முக்கியம்? என்பதைப் பற்றி இக்கட்டுரையில்..

பகிர்:

இன்றைய காலகட்டத்தில் திருமண பொருத்தத்தில் வெறும் நட்சத்திர பொருத்தம் மட்டுமே கண்டு திருமணம் செய்விப்பதைத் தவிர்ப்பது நன்று. காரணம் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்தால் அது 30 சதவீதம் மட்டுமே. கிரக பொருத்தம் தான் மீதமுள்ள 70 சதவீதம். அதனை அதிகமாகப் பார்ப்பது இல்லை. நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்ப்பதால் திருமண முறிவுக்கு அது வழி வகுக்கிறது.

தோஷ சாம்யம் காண வேண்டியது அவசியம் தானா!

ஆம். இன்றைய திருமணங்கள் நடந்த சில நாள்களிலேயே, ஏன் சில திருமணம் நடந்தேறுவதற்கு ஒரு சில மணி நேரங்களிலேயே பிரிவினைக்கு வித்திடுவதும், ஓடிப்போவதும் நடப்பதைக் கண்ணால் காண்கிறோம். இதனை முன்கூட்டியே அறிவதற்குதான் இந்த தோஷ சாம்யம். ஒரு பெண் / ஆண் காதல் செய்கிறாரா, அவர்கள் செய்யும் காதல் வெற்றி பெறுமா, தோல்வி பெறுமா என்பதையும் ஒருவரின் ஜாதகம் மூலம் அறிய முடியும். அவ்வாறு காதல் செய்பவர்கள் திருமணத்திற்கு முன் காவல் நிலையம் வரை சென்று பின்னர் திருமணம் செய்வார்களா எனக் கூட அறிய முடியும். ஆனால், திருமணத்திற்கு நிச்சயித்த பின்னர் அல்லது திருமணம் நடந்து முடிந்த பின்னர் திருமணமானவர்கள் இடையே வரும் பிரிவினையை அறிவதற்கு இந்த தோஷ சாம்ய விதிகளும் அதனை ஆய்வு செய்வதாலேயே அறிய முடியும்.

Advertisement

Advertisement

தோஷசாம்யம் சொல்வது என்ன?

இதனை விவாகரத்தானவர்கள் ஜாதகம் கண்டு அவர்களிடையே பிரிவினைக்கான காரணம் தோஷசாம்யம் கண்டு கூறும்போது பெற்றோர்கள் மற்றும் ஏன் பிரிவினை அடைந்த தம்பதியினர்களே ஒத்துக்கொள்வது அறிய முடிகிறது. இதனைத் திருமணத்திற்கு முன்பே அறிந்திருந்தால் இந்த தவறான அணுகுமுறையைத் தவிர்த்து இரு குடும்பமும் கவலைக்கு உள்ளாகாமல் இருந்திருக்கலாமே எனக் கூறும்போது இதனைக் காண்பது எவ்வளவு முக்கியம் என்பதனை இங்குக் கூறாமல் இருக்க முடியாது.

தோஷ சாம்ய விதி என்ன?

இதனைத் திருமணம் செய்வதற்கு முன் பொருத்தம் காணும்போது இந்த விதிகளை ஆண் மற்றும் பெண் இருவரின் ஜாதகங்களையும் உள்ள அமைப்புகளைக் கண்டு அதனை உட்படுத்தி ஆய்வு செய்தல் அவசியம். ஆணின் தோஷமும் / தோஷ அளவீடுகளும் பெண்ணின் தோஷ அளவீடுகளைச் சமமாக இருப்பின் இணைக்கலாம். ஆணின் தோஷ அளவீடுகள் பெண்ணின் தோஷ அளவீடுகளைக் காட்டிலும் அதிகமாக வந்தாலும் இணைக்கலாம். அதே சமயம், எந்த காலத்திலும் பெண்ணுக்கு தோஷம் ஆணைவிட அதிகமாக வரக்கூடாது. அப்படி வருமானால் அந்த பொருத்தத்தை விலக்குவது நல்லது. அதாவது ஜோதிட ரீதியாக பொருந்தாது எனக் கூறிவிடலாம்.

தோஷ அளவீடுகள் என்பன யாது?

இந்த தோஷ அளவீட்டுக்கு நாம் காண இருப்பது செவ்வாய், சனி, சூரியன் மற்றும் ராகு போன்ற கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் அமையும் நிலைகளே. இவற்றை லக்கினத்திலிருந்தும், சந்திரனிலிருந்தும் மற்றும் சுக்கிரனிலிருந்தும் காண்பது அவசியமாகிறது. மேற்சொன்ன செவ்வாய், சனி, சூரியன் மற்றும் ராகு ஒருவரின் ஜாதகத்தில் 1, 2, 4, 7, 8 மற்றும் 12 ஆகிய இடங்களில் லக்கினத்திலிருந்தும், சந்திரனிலிருந்தும், சுக்கிராமலிருந்தும் காணுதல் அவசியம். இதுவே அந்த கிரகங்கள் தோஷத்தைத் தரும் நிலைகளாகும்.

மேலும், மேற்சொன்ன கிரகங்கள் 1, 2, 4, 7, 8, 12 ல் அமரும் நிலை மூல திரிகோணமாகில் 25% தோஷத்தையும், ஆட்சி வீடாக இருப்பின் 50% தோஷத்தையும், நட்பு வீடாக இருந்தால் 75% தோஷத்தையும், நீச்ச வீடாக இருந்தால் 125% தோஷத்தையும், உச்ச வீடாக இருந்தால் 0% தோஷத்தையும் (தோஷமற்ற நிலை) மற்றும் பகை வீடாக இருப்பின் 100 % தோஷத்தையும் அளிப்பதாக எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தல் அவசியம். இதனை லக்கினத்திலிருந்து, சந்திரனிலிருந்து மற்றும் சுக்கிரனிலிருந்து தோஷத்தை ஆண் மற்றும் பெண்ணுக்குக் கண்டு தோஷ நிலையை அறிந்து முடிவுக்கு வருதல் அவசியம்.

திருமண பொருத்தத்தைக் காணும் போது, இந்த தோஷ சாம்ய விதிகளைக் கண்டு திருமணம் செய்வித்தால் நிச்சயம் பிரிவினை வரவே வராது.

மேற்சொன்ன கிரகங்களான செவ்வாய், சனி, சூரியன் மற்றும் ராகு 1, 2, 4 இடங்களில் அமர்ந்திருப்பின் 3 மடங்கு தோஷத்தையும், 7 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பின் 5 மடங்கு தோஷத்தையும், 8 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பின் 6 மடங்கு தோஷத்தையும் மற்றும் 12 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பின் 1 மடங்கு தோஷத்தையும் அளிப்பதாய் கொண்டு ஆய்வு செய்தல் வேண்டும். அனைத்து ஆய்வுகளுக்குப் பின்னர் வரும் பதிவுகள் ஆணுக்கு மற்றும் பெண்ணுக்கும் தனித்தனியாக ஆய்வு செய்து முடிவுக்கு வருதல் அவசியம்.

இதன் முடிவில் யாருக்கு எந்த ஸ்தானத்தில் அதிக புள்ளிகள் / தோஷ அளவீடுகள் அதிகமாக வருகிறதோ அதுவே அவர்களின் எதிர்பார்ப்புகள் போன்றவை தலை தூக்குவதால், திருமணத்திற்குப் பின்னர் அவர்களுக்குள் பிரிவினையைத் தூண்டும் அடிப்படை காரணியாக இருப்பதை அறிய முடியும். இதனை ஒரு தேர்ந்த ஜோதிடர் மூலம் மட்டுமே திருமணப் பொருத்தத்தைக் கணித்தால் நிச்சயம் திருமணத்தில் பிரிவினைக்கு வாய்ப்பே இருக்காது.

தொடர்புக்கு : WA 98407 17857

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments