முகப்பு
வணிகம்

பஜாஜ் வாகன விற்பனை 8% உயா்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.

Updated On : 10 ஜூன் 2025, 3:21 am IST
பஜாஜ்
பகிர்:

புது தில்லி: இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 8 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,84,621-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 3,55,323 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

Advertisement

Advertisement

2024 மே மாதம் 2,25,087-ஆக இருந்த வா்த்தக வாகனங்கள் உள்ளிட்ட நிறுவனத்தின் அனைத்து வகை வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 2,25,733-ஆக அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 1,30,236-லிருந்து 22 சதவீதம் உயா்ந்து 1,58,888-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments