FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சினிமா

கலவர பூமியாக மாறிய பிக் பாஸ் வீடு: பரபரப்பில் ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன் 6 போட்டி தொடங்கி மூன்றாவது வாரத்திலேயே பரபரப்பின் உச்சத்திற்கு ரசிகர்களை கொண்டு சென்றுள்ளது.

Updated On : 27 அக்டோபர் 2022, 12:53 pm IST
பகிர்:

பிக் பாஸ் சீசன் 6 போட்டி தொடங்கி மூன்றாவது வாரத்திலேயே பரபரப்பின் உச்சத்திற்கு ரசிகர்களை கொண்டு சென்றுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ஜி.பி.முத்து, ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் இரண்டு வாரங்கள் யூடியூபர் ஜி.பி.முத்து மற்றும் அமுதவாணனின் நகைச்சுவையால் அவ்வப்போது பிக்பாஸ் வீடு சிரிப்புடன் காணப்பட்டது. இருப்பினும், இரண்டாவது வாரத்தில் போட்டியாளர்கள் தங்களை தகுதியான இடத்தில் வரிசைப்படுத்தி நிற்கும் விளையாட்டில் அஷீம் மற்றும் ஆயிஷாவிற்கு இடையேயான சண்டை புயலைக் கிளப்பியது. அஷீமின் பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. தொடர்ந்து வார இறுதி கமல் நிகழ்ச்சியில் அனைவரிடமும் அஷீம் மன்னிப்பு கோரினார்.

Advertisement

Advertisement

இதற்கிடையே ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஜி.பி.முத்து தனிப்பட்ட காரணத்தால் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

இந்நிலையில், மூன்றாவது வாரம் தொடங்கியவுடன் பொம்மை டாஸ்ட் ஒன்று போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விளையாட்டின்போது சில போட்டியாளர்களை தவிர மற்ற அனைவரும் இரண்டு குழுக்களாக பிரிந்தனர். அஷீம், ஆயிஷா, மகேஸ்வரி, அசல், செரினா, நிவா உள்ளிட்டோர் ஒரு அணியாகவும், ஜனனி, தனலட்சுமி, அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா உள்ளிட்டோர் ஒரு அணியாகவும் பிரிந்து பொம்மை விளையாட்டிற்கான யுத்தியை வகுத்து விளையாடினர்.

அப்போது அஷீம், செரினா, ஆயிஷா அணியினர் பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடி வந்தபோது, தனலட்சுமி அணியினர் தடுத்து நிறுத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக செரினா மற்றும் நிவா நடைமேடையிலிருந்து கீழே விழுந்து லேசான அடிபட்டது. இதனைத் தொடர்ந்து, அஷீம் - தனலட்சுமி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் பொம்மை போட்டி தொடரவுள்ளது. இன்றைய முதல் ப்ரோமோவில், அஷீமை தடுத்து நிறுத்தும் தனலட்சுமியை அவர் பலமாக தள்ளிவிட்டு செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

மொத்தத்தில் இந்த பொம்மை டாஸ்க் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டியாளர்களின் உண்மை முகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments