தங்க பதக்கம் வென்றார் தொகுப்பாளினி ரம்யா!
மாநில அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று இருக்கிறார்
மாநில அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று இருக்கிறார் தொகுப்பாளினி ரம்யா.
உடற்பயிற்சி மீதும், பளு தூக்கும் போட்டியின் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர், தொகுப்பாளினி ரம்யா. கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான ஐந்தாவது பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்ற ரம்யா, தற்போது மாநில அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்.
கோட்டுர்புரத்தில் சமீபத்தில் நடைபெற்ற இந்த பளு தூக்கும் போட்டியில், எல்லா வயது ஆண்களும். பெண்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதில் ரம்யா, 70 கிலோ, 75 கிலோ மற்றும் 80 கிலோ பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாடி, அதில் தங்கம் பதக்கம் வென்றார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.