FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
குழந்தைகள் உலகம்

இது தெரியுமா? கடல் நீர் உப்புக் கரிப்பதற்கான காரணம் என்ன?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 5:41 pm IST
கடல் - கோப்புப்படம்
பகிர்:

கடல் நீர் உப்புக் கரிப்பதற்கான காரணம் என்ன? கடல் நீருக்கு எப்படி இந்த உப்புச் சுவை வந்தது?

நிலப் பகுதியில் உள்ள பாறைகள் மட்டும் கற்களினால்தான் கடல் நீருக்கு இந்த உப்புச் சுவை வந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கரியமில வாயுவுடன் (கார்பன் டை ஆக்ஸைட்) நீர் சேரும்போது அந்த நீருக்கு அமிலத் தன்மை வந்து விடுகிறது.

Advertisement

Advertisement

மழை நீர் நிலத்தில் விழும்போது, சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் கலந்து இருக்கும் கார்பன் டை ஆக்ஸைட் உடன் சேர்ந்து சற்றே அமிலத்தன்மை கொண்ட நீராக மாறுகிறது.

இப்படி அமிலத்தன்மை கொண்ட நீர்தான் நிலப்பகுதியில் உள்ள பாறைகளை அரிக்க ஆரம்பிக்கிறது. கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள பாறைகள் நீர் பட்டு பட்டு அரித்து இருப்பதைக் காண முடியும்.

இப்படி மழை நீர் பாறைகளை அரிக்கும்போது மின்வயப்பட்ட அணுத் துகள்கள் உண்டாகின்றன. இந்த அணுத்துகள்கள் நீரில் கலந்து குட்டைகளிலும் சிறிய ஓடைகளிலும் சேர்ந்து கொண்டு கடைசியில் கடலில் சென்று கலக்கின்றன.

கடல் நீரில் இருக்கும் பலவித ஆர்கானிசம்களின் மூலம் இந்த மின்வயப்பட்ட அணுத்துகள்கள் காலம் காலமாகக் கடல் நீரில் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்த அணுத் துகள்களில் சோடியம் மற்றும் குளோரைட் அதிகமாக இருக்கும். இந்த சோடியமும் குளோரைடும் சேர்ந்துதான் கடல் நீருக்கு உப்புச் சுவையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இந்த நிகழ்வு தொன்று தொட்டு நடந்து வருவதால் கடல் நீர் உப்புச் சுவையுடன்தான் இருந்தாக வேண்டிய கட்டாயம்!

summary

Regarding rare information that children should know.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments