முகப்பு
செய்திகள்

சாஹூ: பிரபாஸுக்கு ரூ. 30 கோடி சம்பளம்; ஷ்ரதா கபூருக்கு ரூ. 9 கோடி!

ரூ. 150 கோடி செலவில் உருவாகும் சாஹூ படத்தில் பிரபாஸின் சம்பளம், ரூ. 30 கோடி என்று...

Updated On : 15 ஆகஸ்ட் 2017, 4:06 pm IST
பகிர்:

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படம் - சாஹூ. சுஜீத் இயக்கத்தில் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். பாகுபலி 2 படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹூ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

இந்நிலையில் சாஹூ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஷ்ரதா கபூர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரபாஸின் முதல் ஹிந்திப் படமாக சாஹூ குறிப்பிடப்படுவதால், இது ஹிந்தியில் டப் செய்யப்படுவதற்குப் பதிலாக தெலுங்கு, தமிழ் போல ஹிந்தியிலும் தனியாகப் படமாக்கப்படுகிறது. மேலும், ஷ்ரதா கபூர் நடிக்கும் முதல் தென்னிந்தியப் படம் சாஹூ என்றும் கூறலாம்.

Advertisement

Advertisement

இந்நிலையில் பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸின் சம்பளம் குறித்து பல்வேறு தகவல் வெளிவருகின்றன. ரூ. 150 கோடி செலவில் உருவாகும் சாஹூ படத்தில் பிரபாஸின் சம்பளம், ரூ. 30 கோடி என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இந்தப் படம் 3 மொழிகளில் உருவாவதாலும் பாகுபலி படத்துக்குப் பிறகு இந்தியா முழுக்க பிரபாஸுக்கென ஒரு வர்த்தகம் உருவாகியிருப்பதாலும் தயாரிப்பாளர் இந்தப் பெரிய சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

எனில் கதாநாயகி ஷ்ரதாவுக்கு? மூன்று மொழிகளில் உருவாகும் படத்துக்கு ரூ. 12 கோடி கேட்டுள்ளார் ஷ்ரதா. ஆனால் அதற்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் ரூ. 9 கோடி என முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரபாஸ் படம் என்பதால் அதற்குக் கிடைக்கவுள்ள பேர், புகழையும் கணக்கிட்டு ஷ்ரதா இதற்கு ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

மிகப்பெரிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கைகோர்த்துள்ளதால் இந்தப் படம் பாகுபலிக்கு நிகராக கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments