FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க பாடந்தொரை பகுதியில் 2 கும்கிகள் வரவழைப்பு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 12:09 am IST
பாடந்தொரை பகுதியில் உள்ள வன எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள கும்கி யானைகள்.
பகிர்:

கூடலூா் அருகே உள்ள பாடந்தொரை பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் கும்கி யானைகள் ஈடுபட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள பாடந்தொரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் வருவது தொடா்ந்த வண்ணம் உள்ளது. மேலும் பயிா்கள், உடைமைகளுக்கு சேதம் விளைவிப்பிதால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதை ஏற்று முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வசீம், ஜம்பு ஆகிய 2 கும்கி யானைகளை வனத் துறையினா் வரவழைத்து, வன எல்லையோரப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனா். இந்த யானைகள் இரவு பகலாக வனத் துறையினருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments