முகப்பு
செய்திகள்

தெலுங்கு சினிமா, சீரியல்களில் மட்டுமல்ல பிக் பாஸிலும் கூடவா அதிக காரம்?!

தெலுங்கு சினிமாக்களிலும், சீரியல்களிலும் மட்டுமல்ல ரியாலிட்டி ஷோக்களிலும் கூட காரம் கொஞ்சம் ஜாஸ்தி தான் தேவைப்படுகிறது போலும்! என்னேஒரு நாடகத்தனம்?!

Updated On : 19 ஜூலை 2017, 11:57 am IST
பகிர்:

தமிழில் பிக் பாஸ் படிப்படியாக மக்களது ஆர்வத்தை தூண்டி தினமும் அதைப் பற்றியே பேச வைத்துக் கொண்டும், இதுவரையிலான ரியாலிட்டி ஷோக்களின் பேசு பொருளைத் தாண்டி ஏதோ ஒரு தனி ரேஞ்சில் சென்று கொண்டிருந்தால்.. தெலுங்கு பிக் பாஸ், இரண்டாம் நாளிலேயே சும்மா அதிருதில்ல ரேஞ்சில் பயம் காட்டி ஓய்ந்திருக்கிறது.

போட்டியாளர்களில் ஒருவர் போதைக்கு அடிமையானவரைப் போல் நடித்து, தன்னைச் சமாதானப் படுத்த வந்த சக போட்டியாளர்களில் ஒருவரது கழுத்தைக் கடிப்பதைப் போன்ற காட்சியொன்று நேற்றைய தெலுங்கு பிக்பாஸில் ஒளிபரப்பானது. ஆதர்ஷ் பாலகிருஷ்ணா என்ற அந்த நடிகர், பிக் பாஸ் வீட்டில் இரண்டாம் நாளே விஸ்கி கேட்டு மிக வன்முறையாக நடந்து கொள்வதைப் போலான காட்சிகள் நேற்று காட்டப் பட்டன. போட்டியாளர்களில் சிலருக்கு அவர் நடிக்கிறார் என்ற உண்மை தெரிந்திருந்தது... எனவே அவர்கள் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

பாடகி கல்பனா ராகவேந்தர் மற்றும் மதுப்ரியா இருவரும் ஆதர்ஷின் நடிப்பை உண்மை என நினைத்து மிகவும் பயந்து விட்டனர். முதல் நாளில் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட சம்பூர்னேஷிடம் இதைப் பற்றி இருவரும் புகார் சொல்லி... ஆதர்ஷிடம் நடந்த சம்பவத்துக்காக விளக்கம் கேட்கச் சொல்ல கடைசியில் அது பிக் பாஸிடம் முன்னதாகப் பேசி வைத்து சம்பந்தப்பட்ட நடிகர்கள் இருவரும் நடத்திய நாடகம் எனத் தெரியவந்தது. தெலுங்கு சினிமாக்களிலும், சீரியல்களிலும் மட்டுமல்ல ரியாலிட்டி ஷோக்களிலும் கூட காரம் கொஞ்சம் ஜாஸ்தி தான் தேவைப்படுகிறது போலும்! என்னேஒரு நாடகத்தனம்?! கடைசியில் அந்தக் காட்சி பார்வையாளர்களை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியைக் காண வைப்பதற்கான உத்திகளில் ஒன்றானது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments