FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆதார் அட்டையில் பாகுபலிக்கே இந்த கதியா?

நம் நாட்டில் எதில் சமத்துவம் நிலவுகிறதோ இல்லையோ? இந்த ஆதார் கார்டு, ஓட்டர் ஐ.டி, புகைப்படங்களைப் பதிவு செய்யும் விசயத்தில் மட்டும் பரம சமத்துவம் நிலவுகிறது என்பதை அனைவரும் பூரணமாக நம்பலாம்.

7 பிப்ரவரி 2024, 3:32 pm IST
பகிர்:

நம் நாட்டில் எதில் சமத்துவம் நிலவுகிறதோ இல்லையோ? இந்த ஆதார் கார்டு, ஓட்டர் ஐ.டி, புகைப்படங்களைப் பதிவு செய்யும் விசயத்தில் மட்டும் பரம சமத்துவம் நிலவுகிறது என்பதை அனைவரும் பூரணமாக நம்பலாம். இந்தப் புகைப்பட விசயத்தில் மட்டும் எவருடைய ஆணைகளும், அதிகாரங்களும், உலகளாவிய செல்வாக்குகளும் அட்சர சுத்தம் பயன்படுத்தப் படுவதே இல்லை. நாம் இந்த இந்தியப் பெருநாட்டின் பிரஜைகள் என்பதை ஊர்ஜிதப் படுத்துவதற்கு உண்டான அடையாளங்கள் கொண்ட, இந்த அட்டைகளை அதற்கு உரியவர்களைத் தவிர வேறு யாராலும் சட்டென அடையாளம் காண முடியாது என்பது தான் அதன் தனிச் சிறப்பு.

இது ஏதோ சாமானிய மனிதர்களான நமக்கு மட்டுமே இந்தக் கதி என்று எண்ணி விட வேண்டாம், இதோ இந்த ஆதார் கார்டைப் பாருங்கள்... பாகுபலி பிரபாஸின் ஆதார் அட்டை இது. அவருக்கே இது தன்னுடைய புகைப்படம் தான் என்று அடையாளம் காண முடிந்தால் அது அவருடைய அதிர்ஷ்டமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments