FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படம் வெளியாவதில் சிக்கல்: ஆரம்பக் காட்சிகள் ரத்து!

இதனால் படத்தின் முதல் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள்...

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடித்துள்ளார். ‘ஹிப் ஹாப் தமிழா’ இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தை கேமியோ பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இப்படத்தின் முதல் இரு காட்சிகள் இதுவரை ஆரம்பமாகவில்லை. தயாரிப்பாளருக்குப் பண விவகாரம் தொடர்பான பிரச்னைகள் உள்ளதால் திரையரங்குகளுக்கு கேடிஎம் அனுப்படவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பகுதிகளிலும் இப்பிரச்னை காரணமாகப் படம் வெளியாகவில்லை. 

இதனால் படத்தின் முதல் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். இன்று மதியக் காட்சி அல்லது மாலை காட்சி முதல் படம் அனைத்து இடங்களிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments