இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ‘டப்ஸ்மேஷ்’ மிருணாளினி!
மற்றொரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு மிருணாளினிக்குக் கிடைத்துள்ளது...
டப்ஸ்மேஷ் என்பது சினிமா வசனங்கள், பாடல்களை அதேபோல நடித்துக்காட்டும் வீடியோ வடிவிலான தொகுப்பாகும். அதில் ஈடுபட்டுப் புகழ்பெற்றவர்களில் முதன்மையானவர், பெங்களூரைச் சேர்ந்த மிருணாளினி. தற்போது இரு படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
ஆரண்ய காண்டம் புகழ் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார் மிருணாளினி. இதில் அவருக்குச் சிறிய வேடம்தான். அடுத்ததாக, சுசீந்திரன் இயக்கும் சாம்பியன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மிருணாளினி. இது அவர் கதாநாயகியாக அறிமுகமாகும் படம்.
இந்நிலையில் மற்றொரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு மிருணாளினிக்குக் கிடைத்துள்ளது. அறிவியல் பின்புலம் கொண்ட ஜங்கோ என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். தயாரிப்பாளர் சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோ கார்த்திக்கேயன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சதிஷ் என்கிற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இசை - நிவாஸ் பிரசன்னா. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.