செய்திகள்

‘இந்தியன் 2’-வில் கபிலன் வைரமுத்து, ஜெயமோகன் ஆகியோருடன் இணையும் புதிய எழுத்தாளர் யார்?

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் உருவாவிருக்கிறது.

DIN

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் உருவாவிருக்கிறது. இந்தியன் முதல் பாகம் 1996-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் ஷங்கர் தயாராகி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கவிருக்கிறது. இதில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்திற்கு கலை இயக்கம் டி.முத்துராஜ். இசை அனிருத்.

இந்தப் படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். அவருடன் இணைந்து கபிலன் வைரமுத்துவும் வசனம் எழுத இருக்கிறார். தற்போது மூன்றாவதாக, எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் இந்தப் படத்துக்கு வசனம் எழுத உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உப்பு நாய்கள், கானகன், நீல நதி, மயானக் காண்டம், யாக்கை, வசுந்திரா என்னும் நீல வண்ணப் பறவை, மச்சம், நீலப்படம், உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ள இவருக்கு 2016-ம் ஆண்டில் 'கானகன்' நாவலுக்காக 'யுவ புரஸ்கார்' வழங்கப்பட்டது. இயக்குநர் வசந்தபாலனிடம், 'காவியத் தலைவன்', 'அரவான்' படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர் இவர். ஷங்கர் இயக்கத்தில் வெளியாக இருக்கும், '2.O' திரைப்படத்தில் மேக்கிங் ஆஃப் எந்திரன் 2.O-வை எழுத்து வடிவில் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை சாம்பியன்கள்: 2007 முதல் 2024 வரை!

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: ஸ்காட்லாந்தைப் பந்தாடிய ஆப்கானிஸ்தான்!

ஜெகதீசன் அபார சதம்! டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 238 ரன்கள் குவிப்பு!

இனி 1.13 மணி நேரத்தில் சென்னை - பெங்களூரு பயணம்: அஷ்வினி வைஷ்ணவ்

எம்.எம். நரவனே புத்தகத்தில் மோடி, ராஜ்நாத் சிங் அஞ்சும் ஒரு வரி : பிரியங்கா காந்தி பேச்சு

SCROLL FOR NEXT