காசி விஸ்வநாதர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர், மிகப்பெரிய மீசையுடன் தோன்றும் ரஜினியின் 2-ஆவது லுக் ஆகியவை ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுபோன்று படப்பிடிப்பு காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து அங்கு சிறப்புப் பூஜைகளையும் மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.