ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சி நீக்கப்படும்: கோமாளி படத் தயாரிப்பாளர் அறிவிப்பு
ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியை நீக்கவுள்ளதாக படத் தயாரிப்பாளர்...
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோமாளி. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த வசனம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் முதல் ரஜினி ரசிகர்கள் வரை பலரும் அந்தக் காட்சியைப் படத்திலிருந்து நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். மக்கள் நீதி மய்யத்தின் மக்கள் தொடர்பாளர் முரளி அப்பாஸ், இந்த விவகாரம் குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோமாளி படத் தயாரிப்பாளரை கமல் ஹாசன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தன் வருத்தத்தைப் பதிவு செய்தார் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியை நீக்கவுள்ளதாக படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். ரஜினி ரசிகர்களின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக அந்தக் காட்சியை நீக்க முடிவெடுத்துள்ளோம் என்று அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.