ராஜஸ்தானில் சாலைப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 8 தொழிலாளர்கள் பலி!
ராஜஸ்தானில் சாலை பணியின்போது மின்சாரம் பாய்ந்து எட்டு தொழிலாளர்கள் பலியானது பற்றி...
ராஜஸ்தானில் சாலை பணியின்போது மின்சாரம் பாய்ந்து எட்டு தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில், சாலை கட்டுமானப் பணியின் போது கலவை இயந்திரம் மின் கம்பியில் உரசியதால், எட்டு தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இந்த விபத்து உதய்பூர்வதி உட்பிரிவில் உள்ள சாபோலி கிராமத்திற்கு அருகில் நிகழ்ந்தது.
சாபோலி மற்றும் கடம்குண்ட் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் கார்க் தெரிவித்தார். அந்த இடத்தில் சாலை அமைக்க அனுமதி இல்லை என்றும், உள்ளூர் கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து சாலை அமைப்பதற்காக இந்த கலவை இயந்திரத்தை ஏற்பாடு செய்திருந்தனர் என்றும் அவர் கூறினார்.
Advertisement
Advertisement
இந்த கலவை இயந்திர வாகனத்தில் சில கிராம மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அது மின் கம்பியில் உரசியதால் விபத்து நேரிட்டது. மாவட்ட ஆட்சியர் அருண் கார்க் கூறுகையில், நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பலியானவர்களும் காயமடைந்தவர்களும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதற்கிடையில், மாநில எரிசக்தித் துறை அமைச்சர் ஹீரா லால் நகர் இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
In Rajasthan, eight labourers were killed and four others injured after a mixer machine came in contact with an electric wire in Jhunjhunu district today.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.