முகப்பு
செய்திகள்

படம் வெளியான முதல் நாளிலேயே வெற்றியைக் கொண்டாடிய கோமாளி படக்குழு! (படங்கள்)

படம் வெளியான முதல் நாளே ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர், கேக் வெட்டி படத்தின் வெற்றியைக் கொண்டாடியுள்ளார்கள். இந்தப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது... 

Updated On : 17 ஆகஸ்ட் 2019, 12:46 pm IST
பகிர்:

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோமாளி. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியால் படத்தின் டிரெய்லர் அதிகக் கவனத்துக்கு ஆளானது. இந்நிலையில் கோமாளி படத்துக்கு இதுவரை நல்ல வசூல் கிடைத்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள், நிர்வாகிகள் பலரும், வேறெந்த ஜெயம் ரவி படமும் ஆரம்ப நாள்களில் இந்தளவுக்கு வசூலித்ததில்லை, காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகச் செல்கின்றன என்று சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதனால் கோமாளி படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, படம் வெளியான முதல் நாளே ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர், கேக் வெட்டி படத்தின் வெற்றியைக் கொண்டாடியுள்ளார்கள். இந்தப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.