முகப்பு
செய்திகள்

இந்த வாரம் இத்தனை தமிழ்ப்படங்கள் வெளியாகின்றனவா?

ஆகஸ்ட் மாதம் பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவருவதால் இந்த வாரம் 9 தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டுள்ளன...

Updated On : 30 ஜூலை 2019, 10:53 am IST
பகிர்:

ஆகஸ்ட் மாதம் பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவருவதால் இந்த வாரம் 9 தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டுள்ளன.

ஆகஸ்ட் 1 அன்று கழுகு 2 படமும் ஆகஸ்ட் 2 அன்று ஜாக்பாட், கொலையுதிர் காலம், தொரட்டி, ரீல், மாயுரன், ஐஆர் 8, நுங்கம்பாக்கம், வலையா என 9 படங்கள் இந்த வாரம் வெளிவரவுள்ளன. எனினும் ஆகஸ்ட் 2 அன்று தான் சரியாக எத்தனை படங்கள் வெளிவரவுள்ளன என்பது தெரியவரும்.  

இந்தப் படங்களில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம், ஜோதிகா நடித்த ஜாக்பாட் ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளிவருவது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

Advertisement

Advertisement

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் - கொலையுதிர் காலம். இந்தப் படத்தில் பிரதாப் போத்தன், பூமிகா போன்றோரும் நடித்துள்ளார்கள். தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ளது. விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள நான்காவது தமிழ்ப் படம் இது.

குலேபகாவலி, காத்தாடி படங்களை இயக்கிய கல்யாணின் அடுத்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஜோதிகா. ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - விஷால் சந்திரசேகர். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.