மும்பை பாடகரைத் திருமணம் செய்தேனா?: நடிகை அமலா பால் பதில்
மும்பை பாடகரை திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்திகளை நடிகை அமலா பால் மறுத்துள்ளார்.
மும்பை பாடகரை திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்திகளை நடிகை அமலா பால் மறுத்துள்ளார்.
2014-ல் இயக்குநர் விஜய்யைக் காதல் திருமணம் செய்தார் நடிகை அமலா பால். இருவரும் 2017-ல் விவகாரத்து செய்துகொண்டார்கள். கடந்த வருடம் ஜுலை மாதம், மருத்துவர் ஐஸ்வர்யாவை மணந்தார் விஜய்.
கடந்த சில வருடங்களாக மும்பை பாடகர் பவ்நிந்தர் சிங்கைக் காதலித்து வந்தார் அமலா பால். இந்நிலையில் திருமணப் புகைப்படங்கள் எனக் குறிப்பிட்டு இந்தப் புகைப்படங்களை பவ்நிந்தர் மார்ச் 20 அன்று தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். எனினும் அந்தப் புகைப்படங்களை பவ்நிந்தர் நீக்கிவிட்டார். இதையடுத்து, தனது திருமணம் குறித்த செய்தியை அமலா பால் விரைவில் தெரிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
Advertisement
Advertisement
சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது 2-வது திருமணம் குறித்த செய்திகளுக்குப் பதில் அளித்துள்ளார் நடிகை அமலா பால். அவர் கூறியதாவது:
எனது திருமணம் நடக்க இன்னும் சில காலமாகும். நான் தற்போது படங்களில் நடித்து வருகிறேன். அவற்றின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு எனது திருமணம் பற்றி அறிவிப்பேன். எனது காதலைப் பற்றி பேசியுள்ளேன். அதேபோல எனது திருமணம் குறித்தும் அறிவிப்பேன். அதுவரை எனது திருமணம் குறித்த வதந்தியைப் பரப்பவேண்டாம். சரியான நேரம் வரும்போது அதை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.