இந்திய அளவில் முதலிடம்: ‘ஜெய் பீம்’ புதிய சாதனை
நடிகர் சூர்யா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ‘ஜெய் பீம்’ திரைப்படம் இந்திய அளவில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ‘ஜெய் பீம்’ திரைப்படம் இந்திய அளவில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘ஜெய்பீம்’ படத்தை த.செ ஞானவேல் இயக்க நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருந்தார்.
இதையும் படிக்க | ‘ஜெயில்’ திரைப்படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்
Advertisement
Advertisement
ரசிகர்கள் , விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் பல புதிய சாதனைகளை படைத்து வந்தது.
குறிப்பாக உலக அளவில் திரைப்படங்களை மதிப்பிடும் ஐஎம்டிபி தளத்தில் முதல் இடத்தைப் பிடித்தது, கோல்டன் குளோப் விருதிற்கு அனுப்பப்பட்டது என சில முக்கிய சாதனைகளை செய்திருக்கிறது.
இந்நிலையில் இந்திய அளவில் இணையத்தில் அதிகம் தேடிய திரைப்படங்களில் ‘ஜெய் பீம்’ முதலிடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது.
6-வது இடத்தில் விஜய் நடிப்பில் உருவான ’மாஸ்டர்’ திரைப்படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.